பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து, தெர்மோகோலுக்கு தடை

பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து, தெர்மோகோலுக்கு தடை

in Society / Environment

பிளாஸ்டிக் பொருளை தொடர்ந்து, ஜனவர் 1ம் தேதி முதல் தெர்மாகோல் பயன்படுத்தவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்து ஏற்கனவே தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு தெர்மாகோலுக்கு ஜனவரி 1 முதல் தடை விதித்துள்ளது.இதன் காரணமாக பள்ளிகளில் செயல்வழி கற்றலுக்கு தெர்மாகோல் பயன்படுத்தக் கூடாது எனவும், மதிய உணவை பிளாஸ்டிக் டப்பாக்களில் கொண்டுவரக் கூடாது என்றும், பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில், ஸ்ட்ரா, உணவு அருந்தும் மேஜை மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள் உள்ளிட்ட எந்த பொருட்களும் பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.மேலும், பிளாஸ்டிக் இல்லாத சூழலை உருவாக்குவது குறித்து மாணவர்களிடம் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை கோரிக்கை வைத்துள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top