மெக்சிகோ நாட்டின் மிச்சோகேன் மாநிலத்தில் உள்ள அகுயிலா நகராட்சியில் துப்பாக்கி ஏந்திய மர்ம கும்பல் சுட்டதில் 14 போலீசார் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
போதைப்பொருள் விற்பனையாளர்களின் ஆதிக்கம் அதிகம் கொண்டுள்ள அகுயிலா நகராட்சியில் பிணையக்கதிகளாக உள்ள ஒரு பெண் மற்றும் அவரது மகளை மீட்குமாறு, போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நான்கு ரோந்து காரில் வந்த போலீஸ் படையினர் அகுயிலா நகராட்சிக்கு வெளியே உள்ள ஒரு பிரதான சாலையில் பதுங்கியிருந்தனர். அப்போது, துப்பாக்கி ஏந்திய மர்ம கும்பல் சரமாரியாக போலீசாரை நோக்கி சுட்டனர். இந்த, துப்பாக்கி சூட்டில் இரண்டு கார்கள் தீ பிடித்து எரிந்தன.
இச்சம்பவத்தில் 14 போலீசார் உயிரிழந்ததாக மெக்சிகோ பாதுகாப்பு செயலகம் அறிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பதற்கு முழு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளது.
இந்த பயங்கர தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து நீதி மன்றத்திற்கு முன் நிறுத்த மிச்சோகேன் மாநில அரசுடன் தொடர்பு கொண்டு எல்லா உதவிகளையும் செய்து வருகிறோம் என்று மெக்சிகோ பாதுகாப்பு செயலகம் தெரிவித்துள்ளது.
0 Comments