7 மாத குழந்தை மேயராக பதவியேற்ற சுவாரஸ்யம் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரத்தில் நிகழ்ந்துள்ளது.
டெக்சாஸில் உள்ள வைட் ஹால் நகரின் தீயணைப்பு துறையில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு நிதி திரட்ட ஆண்டுதோறும் கவுரவ மேயர் பதவி ஏலம் விடப்படும். இந்த மாதத்திற்கான ஏலத்தில் 7 மாத குழந்தையான வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து கவுரவ மேயராக 7 மாத குழந்தையான சார்ல்ஸ் பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்றது.
150 பேர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். மேயர் சார்பாக மற்றொருவர் பதவி பிரமாணத்தை வாசித்தார். மேயர் சார்லி என அனைவரும் அன்போடு அழைக்கின்றனர். அமெரிக்க வரலாற்றிலேயே மிகச்சிறிய வயதில் மேயரான குழந்தை என்ற சிறப்பு சார்லிக்கு கிடைத்துள்ளது.
0 Comments