சீனாவின் சாங்கிங் மாகாணத்தில் பெண் ஒருவர் தனது மகனை வலது கையில் பிடித்தவாறு சாலையைக் கடக்க முற்பட்டார். அப்போது அவரின் இடது புறத்திலிருந்து வரும் கார் ஒன்று அப்பெண் மீது மோதுகிறது. இதனால் நிலைதடுமாறி அப்பெண் மகனுடன் சாலையில் தடுமாறி விழுகிறார். உடனே எழுந்து தாயை ஆசுவாசப்படுத்தும் சிறுவன் ஆத்திரத்தில் காரை 2 முரை எட்டி உதைக்கிறார்.
அதற்குள் வண்டியை ஓட்டிவந்த நபர் கீழே இறங்கிவர அவரிடம் சிறுவன் ஆவேசமாக ஏதோ சொல்லிக் கொண்டே செல்கிறார். பின்னர் தாயிடம் வந்து அவரை பார்க்கிறார் அதற்குள் அங்கே சிறு கூட்டம் கூடி விடுகிறது.
காரை ஓட்டி வந்த நபர் கீழே இறங்கி அந்தப்பெண்ணை தனது காரின் பின்புறத்தில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். சில விநாடிகளே ஓடும் இந்த வீடியோவில் சிறுவனின் தாய்ப் பாசமும் அவரின் கோபமும் அனைவரையும் கவர்ந்து உள்ளது.
0 Comments