அல்-பாக்தாதியின் மரணம் அமெரிக்காவிற்கு ஒரு சிறந்த நாள்- அமெரிக்க தலைவர்கள் வாழ்த்து

அல்-பாக்தாதியின் மரணம் அமெரிக்காவிற்கு ஒரு சிறந்த நாள்- அமெரிக்க தலைவர்கள் வாழ்த்து

in News / International

சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், பெண்கள், குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்து உள்ளனர்.

அந்நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளும் பொதுமக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவில் உள்ள ஐ.எஸ். அமைப்பின் தலைவராக அபு பக்கர் அல் பாக்தாதி (வயது 48) செயல்பட்டு வருகிறார்.

அவர்களை கட்டுப்படுத்த அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள் அந்நாட்டு அரசுடன் இணைந்து பதிலடி தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், சிரியாவின் வடமேற்கே இட்லிப்பில், அல் பாக்தாதி பதுங்கி இருக்கிறார் என உளவு அமைப்பின் தகவல் கிடைத்தது.

இதையடுத்து,அமெரிக்க ராணுவ படைகள் அந்த பகுதிக்கு சென்று தாக்குதலில் ஈடுபட்டன. இதில், அல் பாக்தாதி கொல்லப்பட்டு உள்ளார் என சிரிய அரசு உறுதிப்படுத்தி உள்ளதுடன் இந்த தகவலை ஈரான் அரசுக்கும் தெரிவித்தது.

இந்நிலையில், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அபுபக்கர் அல்-பாக்தாதியின் மரணத்திற்கு வழிவகுத்த அமெரிக்க படைகள் நடத்திய துணிச்சலான வான்வழித் தாக்குதலுக்கு வாழ்த்துக்கள், அமெரிக்காவின் உயர்மட்ட தலைவர்கள் நேற்று இது உண்மையிலேயே அமெரிக்காவிற்கு ஒரு சிறந்த நாள்! என கூறி உள்ளனர்.

இந்திய-அமெரிக்க தலைவரும் ஐ.நாவின் முன்னாள் அமெரிக்க தூதருமான நிக்கி ஹேலி கூறியதாவது :-

“இது உண்மையிலேயே அமெரிக்காவிற்கு ஒரு சிறந்த நாள்! உலகில் மிகவும் பெரிய பயங்கரவாதியை ஒழித்த ஜனாதிபதி டிரம்ப், எங்கள் இன்டெல் சமூகம் மற்றும் எங்கள் அமெரிக்க சிறப்புப் படைகளுக்கு வாழ்த்துக்கள் ”என கூறி உள்ளார்.

மாநில செயலாளர் மைக் பாம்பியோ கூறியதாவது:-

ஐ.எஸ். தோற்கடிப்பதற்கான உலகளாவிய கூட்டணி மற்றும் பயங்கரவாதத்தின் கொடூரத்தால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்ட உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு இது ஒரு சிறந்த நாள். ஐ.எஸ்.இயக்கத்தின் நீடித்த தோல்வியை உறுதிப்படுத்த இன்னும் பல கட்ட வேலைகள் நடக்க உள்ளன.

இனி கொடூரமான அட்டூழியங்களை செய்யவோ அல்லது வெறுப்பு சித்தாந்தத்தை பரப்பவோ ஆட்சேர்ப்பு செய்யவோ முடியாது.

தலை துண்டிக்கப்படுதல், பெண்களை அடிமைப்படுத்துதல், கற்பழிப்பு, சித்திரவதை மற்றும் மிருகத்தனம் போன்ற தீய செயல்கள் அவரோடு சேர்த்து கல்லறைக்கு சென்றுள்ளன என கூறினார்.

பாதுகாப்பு செயலாளர் மார்க் டி. எஸ்பர் கூறும்போது, இது அமெரிக்காவிற்கு ஒரு சிறந்த நாள் மற்றும் உலகிற்கு ஒரு சிறந்த நாள் என் கூறினார்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இருந்தவருமான ஜோ பைடன், பயங்கரவாதி அல்-பாக்தாதிக்கு எதிராக சிறப்புப் படைகள், உளவுத்துறை சமூகம் மற்றும் அனைத்து துணிச்சலான ராணுவ வல்லுநர்களையும் வாழ்த்தினார்.

மேலும் அவர் கூறும் போது, அவரது போதனைகள் இஸ்லாத்தின் போதனைகள் அல்ல. வெறுப்பு மற்றும் மிருகத்தனமான ஒரு சித்தாந்தம், வெகுஜன படுகொலைகள், மரணதண்டனைகள், இன மற்றும் மத சிறுபான்மையினரை அடிமைப்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைத்து இருந்தார். அவர் இல்லாத உலகம் சிறந்தது மற்றும் பாதுகாப்பானது என கூறினார்.

சபாநாயகர் நான்சி பெலோசி கூறும்போது, அமெரிக்கர்கள் எங்கள் ராணுவம் மற்றும் எங்கள் உளவுத்துறை நிபுணர்களின் வீரம், அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கு வணக்கம் செலுத்துகிறார்கள். இந்த துணிச்சலான நடவ்டிக்கையில் எந்த அமெரிக்க வீரர்களும் இறக்கவில்லை என்பதில் நாங்கள் நிம்மதியடைகிறோம் என கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top