அரசியல் கட்சிகள் ஆண்டுதோறும் தேர்தல் கமிஷனுக்கு தங்களுடைய கட்சியின் வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்வது வழக்கம். இந்த வருடத்திற்கான கணக்குளை ஆம்ஆத்மி கட்சி தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பித்துள்ளது. நன்கொடைகள், இதர நிதிகள் மூலம் 2017-18-ம் ஆண்டு கட்சியின் நிதி வரவு ரூ.6 கோடியே 6 லட்சமாக இருந்துள்ளது. அந்த தொகை 2018-19-ம் ஆண்டு ரூ.10 கோடியே 11 லட்சமாக உயர்ந்துள்ளது.
நன்கொடையின் மூலம் கிடைத்த வரவு ரூ.10 கோடியே 61 லட்சத்தில் இருந்து இரு மடங்காக உயர்ந்து ரூ.19 கோடியே 31 லட்சமாக அதிகரித்து இருக்கிறது.
2017-18-ம் ஆண்டு கட்சியின் தேர்தல் செலவாக ரூ.33 லட்சத்து 21 ஆயிரமாக இருந்த தொகை இந்த ஆண்டு (2018-2019) ரூ.4 கோடியே 30 லட்சமாக உயர்ந்துள்ளது.
மேலும், ஆம்ஆத்மி கட்சிக்கு வங்கி சேமிப்பு கணக்கு, வைப்புத்தொகை கணக்கு ஆகியவற்றின் மூலம் இருப்புத்தொகை ரூ.3 கோடியே 85 லட்சத்திலிருந்து ரூ.7 கோடியே 94 லட்சமாக உயர்ந்துள்ளது.
0 Comments