அமெரிக்க பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவிற்கு 13 எம்.கே.45 ரக கடற்படை துப்பாக்கிகள் மற்றும் ராணுவ உபகரணங்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசாங்கம், ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயுதங்கள், அதன் உதிரி பாகங்கள், அவற்றை கையாள்வதற்கான பயிற்சி, தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகிய அனைத்தும் இதில் அடங்கும்.
இந்த ராணுவ வியாபாரம் மூலம் தங்கள் நாட்டின் வெளியுறவு கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியா நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் தனது எதிரிகளை திறன்பட எதிர்கொள்ள இந்த ஆயுதங்கள் உதவியாக அமையும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
0 Comments