ஜப்பானின் யோக்கஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் 138 இந்தியர்கள் உட்பட 3700 பேர் வெளியே வரவிடாமல் அடைபட்டுள்ளனர்.
இதில் பயணித்த ஹாங்காங் பயணிக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கப்பலில் உள்ள இதர பயணிகளில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பரவியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் யாவரும் கப்பலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜப்பான் அங்கு ராணுவத்தை குவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.பயணிகள் வெளியேறுவதைத் தடுக்கவோ அவர்களை வெளியேற்றவோ ராணுவம் குவிக்கப்படுகிறது.
அனைத்துப் பயணிகளிடமும் கொரனோ வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதே போல் வெஸ்டர்டாம் என்ற இன்னொரு கப்பலும் கொரோனா வைரஸ் பீதியால் தாய்வான், ஜப்பான் நாடுகளின் அனுமதி கிடைக்காமல் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
0 Comments