WWE துணைத் தலைவர் ட்ரிபிள் ஹெச் ரெஸ்ட்லிங் வீராங்கனை பெய்ஜிடம் மன்னிப்பு கோரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அண்மையில் WWE துணைத் தலைவர் ட்ரிபிள் ஹெச் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்தார். அதில் நிருபர் ரெஸ்ட்லிங் வீராங்கனை பெய்ஜ் மற்றும் ஸ்டார் எட்ஜ் மீண்டும் ரிங்கிற்கு வருவார்களா? என கேள்வி எழுப்பினர். பெய்ஜ் மற்றும் ஸ்டார் எட்ஜ் இருவருமே ரெஸ்ட்லிங்கில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்.
இதற்கு பதில் அளித்த ட்ரிபிள் ஹெச், மற்றவர்களை போல நானும் பெய்ஜ் மற்றும் ஸ்டார் எட்ஜின் தீவிர ரசிகன். அவர்கள் ரிங்கிற்குள் வரவேண்டும் என நானும் ஆசை படுகின்றேன்.அவர்கள் நல்ல உடல்நலத்துடன் ஆரோக்யமாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். எட்ஜுக்கு குழந்தைகள் உள்ளனர். பெய்ஜுக்கு குழந்தைகள் இருக்கலாம். யாருக்கு தெரியும் என நையாண்டியாக பதில் அளித்தார்.
இந்த கருத்திற்கு பிறகு ட்ரிபிள் ஹெச் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானார். இதற்கு WWE வீரர்களான நிக்கி பெல்லா, ப்ரீ பெல்லா உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது WWE துணைத் தலைவர் ட்ரிபிள் ஹெச் அவ்விதம் பேசியதற்கு மன்னிப்பு கோரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
0 Comments