பாடம் எடுக்கும் ஆசிரியர் ஒருவர் தன் வகுப்பில் பயிலும் 15 வயதே ஆன மாணவருக்கு தன்னுடைய நிர்வாணப் புகைப்படத்தை அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மேற்கு விர்ஜீனியாவில் செயல்படும் மிடில் ஸ்கூலில் அறிவியல் ஆசிரியராக ரம்சே பெத்தான் பீர்ஸ் பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று தன் கணவனுக்கு தன்னுடைய நிர்வாணப் புகைப்படத்தை அனுப்புவதாக நினைத்து தற்செயலாக தன்னுடைய வகுப்பில் படிக்கும் மாணவனுக்கு ஸ்னாப் சாட்டில் அனுப்பிவிட்டார். இதைக் கண்ட மாணவன் தன்னுடைய நிர்வாணப் படங்களையும் ஆசிரியருடன் பகிர்ந்துள்ளார். தவறுதலாக நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு இப்படி ஒரு மெசேஜை ஆசிரியர் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
ஆனால் அத்தோடு அந்த பள்ளி மாணவன் நிறுத்தவில்லை. மேலும் புகைப்படங்களைக் கேட்டு அந்த ஆசிரியரை மிரட்டியுள்ளார். ஆசிரியையும் பயந்து மேலும் சிலப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த விசயம் பெற்றோருக்குத் தெரிய வர ஆசிரியரின் மீது மாணவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரை அளித்தனர்.
பெற்றோர் அளித்தப் புகாரின் அடிப்படையில் ரம்சே பெத்தான் பீர்ஸ் கைது செய்யப்பட்டு 2 மாதம் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் தனது தரப்பு நியாயத்தைக் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். மேலும் இளம் வயது மாணவருக்கு நிர்வாணப் படத்தை அனுப்பியது தவறுதான் என்று ஒப்புக் கொண்டார். இந்த சம்பவத்தால் ரம்சே பெத்தான் பீர்ஸ் அவர்களின் வேலை பறிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் 50 ஆண்டுகாலம் அவர் பாலியல் குற்றவாளியாகக் கருதப்பட்டு கண்காணிக்கப்படுவார் என நீதிமன்றம் தீர்ப்பை எழுதியுள்ளது.
0 Comments