இந்தியாவுக்கு எதிராக புனிதப் போர் - காஷ்மீர் மக்களுக்கு இம்ரான் கான் அழைப்பு!

இந்தியாவுக்கு எதிராக புனிதப் போர் - காஷ்மீர் மக்களுக்கு இம்ரான் கான் அழைப்பு!

in News / International

காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி பாகிஸ்தானில் தீபாவளி தினத்தன்று கருப்பு தினம் கொண்டாடப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக புனிதப் போர் புரியுமாறு காஷிமீர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

கடந்த ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தொடர்ந்து தலையிட்டு வந்த பாகிஸ்தானில், தீபாவளி திருநாளான நேற்று (ஞாயிறு), காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் "கருப்பு தினம்" கொண்டாடப்பட்டது. அதில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் மக்கள் பேரணியில் ஈடுபட்டும், போராட்டம் மேற்கொண்டும் இந்தியாவுக்கு எதிரான தங்களின் கருத்தை வெளிப்படுத்தினர்.

இதை தொடர்ந்து, பத்திரிக்கையாளர்களை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், "பயங்கரவாதம் என்ற போர்வையை போர்த்தி, ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் மக்களின் தற்போதைய நிலையை மறைக்க முயல்கிறது இந்திய அரசு. காஷ்மீர் மக்களின் நிலையை மேம்படுத்த எல்லா வகையான முயற்சிகளையும் மேற்கொள்ள பாகிஸ்தான் தயாராக உள்ளது " என்று கூறியுள்ளார்.

மேலும் பாகிஸ்தான், காஷ்மீர் மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்ற வாக்குறுதியையும் அளித்துள்ளார் பிரதமர் இம்ரான் கான். காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக தன் ட்விட்டர் பக்கத்திலும் இவர் பதிவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்ற இந்தியாவின் முடிவை, காஷ்மீர் மக்களே வரவேற்கும் நிலையில், பாகிஸ்தான் தேவையில்லாத வேலைகளில் ஈடுபடுகிறது என்பதே உண்மை

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top