இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஈரான்-இந்தியா கூட்டு பொருளாதார ஆணைய கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஈரான் சென்றுள்ளார். அவர் நேற்று அங்கு ஈரான் வெளியுறவு மந்திரி முகமது ஜாவேத் ஷரிப்புடன் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து ஷரிப் டுவிட்டரில், ‘‘மிக நெருங்கிய இருநாட்டு உறவுகள் குறித்தும் மற்றும் இரு நாடுகளையும் பாதிக்கும் பிராந்திய, உலகளவிலான பிரச்சினைகள் குறித்தும் சிறப்பான முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
0 Comments