பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச விமான ஒழுங்குமுறை அமைப்பிடம் புகார் அளிக்க இந்தியா முடிவு?

பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச விமான ஒழுங்குமுறை அமைப்பிடம் புகார் அளிக்க இந்தியா முடிவு?

in News / International

சவுதி அரேபிய மன்னரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று சவுதி அரேபியாவுக்கு செல்கிறார். அங்கு தங்கி இருக்கும் அவர், ரியாத்தில் நடைபெறும் எதிர்கால முதலீட்டு நிறுவன மன்றத்தின் 3-வது அமர்வில் கலந்து கொள்கிறார். இந்த பயணத்தின்போது பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்தி செல்ல இந்தியா சார்பில் அந்நாட்டிடம் அனுமதி கோரப்பட்டது.

ஆனால், அவர் செல்லும் விமானம் சவுதி அரேபியா சென்றடைவதற்கு பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி தர மறுத்துவிட்டது.. இதனை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி இந்திய உயர் அதிகாரி ஒருவருக்கு எழுத்துப்பூர்வமாக அறிக்கை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு பிரதமர் மோடி செல்லும் விமானத்தை தன் வான்வெளியில் அனுமதிக்க தடை விதித்து வருகிறது. அதேபோல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விமானம் செல்வதற்கும் பாகிஸ்தான் அனுமதி மறுத்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச விமான ஒழுங்குமுறை அமைப்பிடம் (ICAO) புகார் அளிக்க இந்தியா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top