துபாயில் மனைவியை கொடூரமாக தாக்கிய இந்தியர் கைது!

துபாயில் மனைவியை கொடூரமாக தாக்கிய இந்தியர் கைது!

in News / International

துபாயில், கண்களில் ரத்தம் வரும் அளவுக்கு கணவனால் கொடூரமாக தாக்கப்பட்ட இந்திய பெண் மீட்கப்பட்டார்; அவரது கணவனை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூருவை சேர்ந்தவர் ஜாஸ்மின் சுல்தான்(33). இவர் தனது கணவன் முகமது கிஷார் உல்லா(47) மற்றும் 5வயது, 17 மாத மகன்களுடன் துபாயில் வசித்து வருகிறார். இந்த நிலையில், முகத்தில் காயங்களுடன், கண்கள் வீங்கி, ரத்தம் வழிந்த படி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில், தனது கணவன் தன்னை மிகவும் கொடூரமாக அடித்து துன்புறுத்துவதாகவும், இந்தியாவுக்கே தான் செல்ல விரும்புவதாகவும் கதறி அழுதபடி தெரிவித்தார். அவர் தன்னை தினமும் அடித்து துன்புறுத்துவதாகவும் , தன்னை மீட்கும்படியும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வீடியோ வைரல் ஆக, இந்திய தூதரகம் தலையிட்டு உடனடி நடிவடிக்கை எடுத்தது. இதனையடுத்து ஷார்ஜா போலீசார், அவரது கணவரை கைது செய்து, பெண்ணையும், குழந்தைகளையும் மீட்டு இந்தியா அனுப்பி வைத்தனர்.இந்நிலையில், ஜாஸ்மின் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய தூதரகம், ஷார்ஜா போலீசார் மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகளுடன் பாதுகாப்பாக பெங்களூரு திரும்பி விட்டதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top