புனிதர் ஆனார் கேரள கன்னியாஸ்திரி மரியம் திரேசியா!

புனிதர் ஆனார் கேரள கன்னியாஸ்திரி மரியம் திரேசியா!

in News / International

கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த 1876-ம் ஆண்டு பிறந்தவர் மரியம் திரேசியா. சீறோ மலபார் திருச்சபையில் கன்னியாஸ்திரியாக இருந்த இவர், 1914-ம் ஆண்டு அருட்சகோதரிகளுக்கான திருக்குடும்ப சபையை நிறுவினார். இந்த சபை தற்போது பல கிளைகளை கொண்டு வளர்ந்துள்ளது.

அயராத இறைப்பணி ஆற்றி வந்த கன்னியாஸ்திரி மரியம் திரேசியா கடந்த 1926-ம் ஆண்டு மரணமடைந்தார். அவருக்கு கடந்த 2000-ம் ஆண்டு முக்திபேறு பெற்றவர் என்ற பட்டம் அப்போதைய போப் 2-ம் ஜான் பாலால் வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மரியம் திரேசியாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் புனிதர் பட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வாடிகனில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இந்த விழாவில் மத்திய அரசு சார்பில் வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளிதரன் தலைமையில் சிறப்புக்குழு ஒன்று பங்கேற்றது. இதற்காக இந்த குழுவினர் வாடிகன் சென்றனர்.

கத்தோலிக்க திருச்சபையில் ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்க அவரது மரணத்துக்குப் பிறகு 2 அதிசயங்களை நிகழ்த்தியிருக்க வேண்டும். அதன்படி இருவரின் நோய் தீர்த்து மரியம் திரேசியா அதிசயம் நிகழ்த்தினார். இதனை போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்த புனிதமான நிகழ்வு மூலம் கேரளாவில் உள்ள நூற்றாண்டுகள் மரபு கொண்ட சிரியோ-மலபார் தேவாலயத்தில் புனிதராக உயரும் 4-வது கன்னியாஸ்திரி மரியம் திரேசியா என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top