சர்வதேச நாடுகள் பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படுகிறது -ஹமாத் அசார்

சர்வதேச நாடுகள் பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படுகிறது -ஹமாத் அசார்

in News / International

பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் சாம்பல் நிறப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான், வரும் பிப்ரவரி 2020 க்குள் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை முற்றிலும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து, அதற்கு பிறகும் பாகிஸ்தானின் சாம்பல் நிறம் தொடரப்படலாம் என்று பரிதாபமாக கூறியுள்ளது.

பாகிஸ்தானின் தற்போதைய நிலை குறித்து உரையாற்றிய அந்நாட்டு பொருளாதார அமைச்சகத்தை சேர்ந்த ஹமாத் அசார், பாகிஸ்தான் சாம்பல் நிறத்தில் வைக்கப்பட்டிருப்பதற்கு 2 முக்கியமான காரணங்கள் தான் உள்ளன. ஒன்று அந்நாட்டின் வரலாறு மற்றொன்று பிற நாடுகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு என்று கூறியுள்ளார்.


இதை தொடர்ந்து, இதே சாம்பல் நிறப்பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் பிற நாடுகளுக்கு இத்தகையை அழுத்தத்தை கொடுப்பதில்லை சர்வதேச நிதியமும், உலக நாடுகளும் என்று கூறிய ஹமாத், மற்ற நாடுகள் பயங்கரவாதத்தை குறைப்பதற்காக 80 சதவீதம் உழைத்தாலும் அதை பட்டியலில் இருந்து நீக்க முயற்சி எடுக்கும் நிதியம், பாகிஸ்தான் 100 சதவீத முயற்சி எடுத்தாலும் அதை ஒப்புக் கொள்ள தயாராக இருபபதில்லை என்பதே உண்மை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

இந்நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் குறித்து வரும் டிசம்பர் 7ஆம் தேதியன்று ஆசிய-பசிபிக் அமைப்பின் முன்பு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top