ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த 3 குண்டுவெடிப்பில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர்.
பாக்தாத் நகரில் உள்ள அல்-சாப், அல்-பையா மற்றும் அல்-பலாதியாத் ஆகிய பகுதிகளில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனங்கள் வெடித்துச் சிதறின. இந்த சம்பவம் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளன.
தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து பாக்தாத் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments