ரித்திக் ரோஷனை ரசித்த மனைவியை  ஆத்திரத்தில் குத்திக் கொன்ற கணவர்

ரித்திக் ரோஷனை ரசித்த மனைவியை ஆத்திரத்தில் குத்திக் கொன்ற கணவர்

in News / International

"எனக்கு பிடிக்காது பார்க்காதேன்னு சொன்னேன். ஆனால் கேட்கவே இல்லை. அதான் குத்திட்டேன்.." இப்படி எழுதி வைத்து விட்டு, தனது மனைவியையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் நியூயார்க்கைச் சேர்ந்த இந்தியர் ஒருவர். 33 வயதான அந்த இந்தியரின் பெயர் தினேஷ்வர் புத்திதாட். இவரது மனைவி டோன் டோஜோய், 27 வயது. நியூயார்க்கின் க்யீன்ஸ் பகுதியில் வசித்து வந்தனர். டோன், ஒரு பாரில் வேலை பார்த்து வந்தார். ரித்திக் ரோஷன் என்றால் இவருக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் தினேஷ்வருக்கு ரித்திக் ரோஷனை சுத்தமாக பிடிக்காதாம். கணவரை அடிக்கடி ரித்திக் ரோஷன் பாட்டு பாடி டீஸ் செய்வது டோனின் வேலை. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் கூட ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ரோஷன் என்றாலே கடுமே அலர்ஜியாகி விட்டது தினேஷ்வருக்கு!

இந்த நிலையில் சம்பவத்தன்று டிவி பார்த்துக் கொண்டிருந்தனர் கணவரும் மனைவியும். அப்போது வழக்கம் போல ரித்திக் ரோஷன் பாட்டை வைத்துள்ளார் மனைவி. சானலை மாற்றுமாறு கூறியுள்ளார் கணவர். இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் மூண்டது. அப்போது ஆத்திரமடைந்த கணவர், கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டிக் கொன்றார்.

இதை சற்றும் எதிர்பாராத டோன் அப்படியே சுருண்டு விழுந்து இறந்து போனார். இதைத் தொடர்ந்து தூக்குப் போட்டு தினேஷ்வரும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நியூயார்க்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலைக்கு முன்பு தனது சகோதரிக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார் தினேஷ்வர். அதில் தனது மனைவி தனது பேச்சைக் கேளாமல் பாடல் கேட்டதால் கொன்று விட்டதாகவும் தானும் தற்கொலை செய்யப் போவதாகவும், வீட்டுச் சாவியை பூத்தொட்டிக்குக் கீழ் வைத்திருப்பதாகவும் அதில் கூறியிருந்தார் தினேஷ்வர். கடந்த ஜூலை மாதம்தான் இவர்களுக்குத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும் போல.

இதில் சில முறை அவர் மனைவியை அடித்துள்ளார். இதையடுத்து கோர்ட்டுக்குப் போன டோன், தன்னை அடிக்கக் கூடாது என்று தடை உத்தரவு வாங்கி வைத்திருந்தார். மனைவி மீது பாசத்துடன் தான் இருந்துள்ளார் தினேஷ்வர். ஆனால் ரோஷன் மேட்டர் உள்ளிட்டவை சேர்ந்து மனைவி மீது ஆத்திரமாக மாற்றி விட்டது என்று அவர்களது நண்பர்கள் கூறுகிறார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top