இந்தியர்கள் இனி பிரேசில் செல்ல விசா வேண்டாம்!

இந்தியர்கள் இனி பிரேசில் செல்ல விசா வேண்டாம்!

in News / International

இந்தியர்கள் மற்றும் சீனர்கள் பிரேசிலுக்கு வர இனி விசா தேவையில்லை என்று அந்நாட்டின் அதிபர் ஜெயர் போல்சொனாரோ அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரேசில் அதிபராக, வலதுசாரி கட்சியைச் சேர்ந்த ஜெயர் போல்சொனாரோ பதிவியேற்றதை தொடர்ந்து, அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளை சேர்ந்த மக்கள், சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்காகவோ, தொழில் வர்த்தக நோக்கங்களுக்காகவோ பிரேசில் வர இனி விசா தேவையில்லை என்ற அறிவிப்பை விடுத்திருந்தார்.

இதை தொடர்ந்து, நேற்று சீனா சென்றிருந்த அவர், இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த மக்களுக்கும் இனி விசா தேவையில்லை என்ற அறிவிப்பை விடுத்துள்ளார். பிரேசில் நாட்டின் சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை வளர்ச்சி அடைய செய்யும் நோக்கத்துடன் தான் இவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுவரை பிரேசில் செல்ல, வளர்ந்த நாடுகளில் சிலவற்றுக்கு மட்டும் விசா விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, வளர்ந்து வரும் ஓர் நாட்டுக்கு விசா விலக்கு அளித்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top