எத்தியோப்பியா நாட்டின் பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கிய துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது அமைதிக்கான நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2019ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா நாட்டின் பிரதமர் அபய் அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான எரித்திரியா எல்லை பிரச்னையை அமைதியான முறையில் தீர்வு கண்டதற்காக அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments