மும்பை தாக்குதல் சதிகாரர்களை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும்; அமெரிக்கா வலியுறுத்தல்

மும்பை தாக்குதல் சதிகாரர்களை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும்; அமெரிக்கா வலியுறுத்தல்

in News / International

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி, கடல்மார்க்கமாக மும்பைக்குள் நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் 166 பேர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மோர்கன் ஆர்டகஸ், இச்சம்பவத்தின் 11-வது நினைவு தினத்தையொட்டி, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

11 ஆண்டுகளுக்கு முன்பு, பயங்கரவாதிகளின் கோழைத்தனமாக நடத்திய தாக்குதலால் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேரின் உயிர் பறிபோனது. அவர்களை நினைவுகூர்கிறோம். இந்த தாக்குதலுக்கு காரணமான சதிகாரர்கள், நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்ற பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினரின் கோரிக்கையை ஆதரிக்கிறோம்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top