திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார். இதன் கிளைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன. குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற புகார்களின் அடிப்படையில் தற்போது போலீசாரால் நித்யானந்தா தேடப்பட்டு வருகிறார். இந்நிலையில் நித்யானந்தா, 'கைலாஷ்' என்ற பெயரில் தனிநாடு அமைக்கப்போவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே நித்யானந்தா கைலாசா என்ற ஒரு நாட்டை உருவாக்க இருக்கிறார் என்ற பேச்சும் அடிபட்டது. அதற்கு ஏற்றார் போல தனி பாஸ்போர்ட், தனி சின்னங்கள், அமைச்சரவை என தனி நாடு அமைக்கப்போவதாக செய்தி வெளியானது. இது குறித்து அவர் தனிப்பட்ட kailaasa.org என்ற இணையதளத்தை ஏற்படுத்தி அதில் தகவல்களை வெளியிட்டு உள்ளார்.
ஆனால் நித்யானந்தாவின் அடைக்கலம் கோரிக்கையை மறுத்து விட்டதாக ஈக்வடார் நாடு அறிவித்துள்ளது, தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டார் என்றும், ஹைதி தீவில் மறைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள ஈக்வடார் தூதரகம் ஒரு அறிக்கையில், நித்யானந்தா செய்த சர்வதேச தனிப்பட்ட பாதுகாப்பு கோரிக்கையை ஈக்வடார் அரசு மறுத்துள்ளது. டெல்லியில் உள்ள ஈக்வடார் தூதரகம் ஒரு அறிக்கையில் நித்யானந்தாவின் தனிப்பட்ட பாதுகாப்பு (அடைக்கலம்) கோரிக்கையை ஈக்வடார் அரசு மறுத்து உள்ளது.
0 Comments