வீட்டுக்காவலில் உள்ள காஷ்மீர் தலைவர்களை விடுவிக்க வேண்டும் - அமெரிக்கா அறிவுறுத்தல்

வீட்டுக்காவலில் உள்ள காஷ்மீர் தலைவர்களை விடுவிக்க வேண்டும் - அமெரிக்கா அறிவுறுத்தல்

in News / International

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய அரசு ரத்து செய்தது.

அதைத் தொடர்ந்து காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூப் முக்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. செல்போன் மற்றும் இண்டர் நெட் சேவை ரத்து செய்யப்பட்டு தற்போது சிறிது சிறிதாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீரை பார்வையிட 15 வெளிநாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் அனுமதிக்கப்பட்டனர். அதில் 15 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர் ஆலிஸ் வல்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றிய பிறகு முதன் முறையாக அங்கு பார்வையிட 15 வெளிநாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது அங்கு பல முன்னேற்றமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இண்டர் நெட் சேவை படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. அதை எங்களது தூதர் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் நேரில் சென்றபோது பார்த்துள்ளனர். இது பயனுள்ள நடவடிக்கை .

இதுபோன்ற எங்களது தூதரக அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட இந்திய அரசு அனுமதிக்க வேண்டும். மேலும் காஷ்மீரில் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் இருக்கும் முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முக்தி மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

குடியுரிமை திருத்த சட்டப்படி அனைவருக்கும் சமமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top