இலங்கையில் சுதந்திர தின விழாவில் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் தமிழில் பாடப்படாது என்று இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ராஜபக்சே குடும்பம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து தமிழர்களின் உரிமைகள் நசுக்கப்பட்டு வருகின்றன. சிங்களப் பேரினவாதத்தின் கீழ் தான் தமிழர்கள் இருக்க வேண்டும் என அடுத்தடுத்து சட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
இந்நிலையில் தான் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும் என அமைச்சர் பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில் இந்தியாவில் எண்ணற்ற இனம், மொழிகள் இருந்தாலும் ஒரே மொழியில் தான் தேசிய கீதம் பாடப்படுகிறது. அதே போல் தான் இலங்கையில் சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம் பாடப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இலங்கையில் சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே அதிகார மோதல் பலவருடங்களாக இருந்து வருகிறது. இந்த அதிகாரப் பகிர்வை சிங்களத்தினரிடம் இருந்து பெறுவதற்காக தமிழர்கள் அமைப்புகளாகத் திரண்டு போராடினர். ஆனால் அதிகாரப் பகிர்வு கிடைக்காது என்பதை உணர்ந்ததால் தான் தனி ஈழம் கேட்டு விடுதலைப்புலிகள் உள்ளிட்ட எண்ணற்ற அமைப்புகள் சிங்களர்களுக்கு எதிராக போரை நடத்தினார்.
2009ல் நடந்த இறுதிக்கட்டப் போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதோடு, லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தது. அதன்பின் ராஜபக்சேவின் அரசு ஆட்சியை இழந்தது. இதனால் தமிழர்களின் உரிமைகள் இலங்கையில் நசுக்கப்படும் சம்பவங்கள் குறைந்திருந்தன. ராஜபக்சே கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார். ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழர்களின் மீதான அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன.
0 Comments