இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சே, அரசசிங்கத்துடன் இணைந்து செயல்பட வருமாறு தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையின் அதிபர் தேர்தல் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 52.25 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து இன்று அனுராதபுரத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், கோத்தபய ராஜபக்சே இலங்கையின் அதிபராக பதவியேற்றுக்கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், எனது ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை என தெரிவித்தார். தமிழ் மக்களும் தனக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்த்ததாகவும், தமிழர்கள் வாக்களிக்கவில்லை என்றாலும் அனைவரையும் சமமாக பார்ப்பேன் என்றும் தெரிவித்த அவர், இணைந்து செயல்பட வருமாறு தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
0 Comments