தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!

தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!

in News / International

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத்துறை அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டிவந்து மீன் பிடித்ததாகக் கூறி 13 பேரை கைது செய்து சென்றனர்.

அவர்களின் 3 படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட அனைவரும் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் யாழ் நீரியல் துறை அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளனர்.

மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது மீனவர்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு வலியுறுத்தும் மீனவர்கள், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும் கோரியுள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top