ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது

in News / International

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பற்றி எரியும் நெருப்பில் சிக்கி கோடிக்கணக்கான உயிரினங்கள் பலியாகி உள்ள நிலையில் மனிதர்களில் 24 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்களுடன் ராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

நெருப்பில் சிக்கியும், மூச்சுத் திணறியும், நீர் கிடைக்காமலும் நியூ சவுத் வேல்ஸ் பகுதியின் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கான கங்காருகளும், டிங்கோ எனப்படும் காட்டு நாய்களும், மான்கள், ஆடுகள் உயிரிழந்து கிடக்கின்றன.

இவற்றை அப்புறப்படுத்த ஆட்கள் இல்லாததால் தொற்று நோய் பரவும் ஏற்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top