இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்!

இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்!

in News / International

பாகிஸ்தானில் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள் மீது உலக மீடியாக்கள் எதுவும் கவனம் செலுத்துவதில்லை என்று குற்றம் சுமத்திய இந்திய பத்திரிக்கையாளருக்கு எதிராக தனது கருத்தை முன் வைத்துள்ளார் அமெரிக்க காங்கிரஸை சேர்ந்த இலான் ஒமர்.

அமெரிக்காவில் நடைபெற்ற வெளியுறவு குழு மாநாட்டில் உரையாற்றிய இந்திய பத்திர்க்கையாளர் ஆர்த்தி டிக்கு சிங், பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளாக மனித உரிமை அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவற்றை குறித்த செய்திகளை வெளிகொண்டுவர பத்திரிக்கையோ, மனித உரிமை ஆர்வலர்களோ தயாராக இல்லை எனவும் பாகிஸ்தானின் மனித உரிமை அத்துமீறல்களை கண்டித்து கருத்து தெரிவித்திருந்தார்..

இதை தொடர்ந்து, பாகிஸ்தானில் மேற்கொள்ளப்படுவது மனித உரிமை அத்துமீறல் என்றால், இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டது என்ன என்ற கேள்வியெழுப்பி ஆர்த்தி சிங்கின் கருத்துகளுக்கு எதிராக தனது கருத்தை முன் வைத்துள்ளார் அமெரிக்க காங்கிரஸை சேர்ந்த இலான் ஒமர்.

மேலும், நாட்டு மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் அரசு ரகசியமாக செய்யாது என்று குறிப்பிடுவதன் மூலம், இந்தியா, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்றதும் மனித உரிமை அத்துமீறல் தான் என்று குற்றஞ்சாட்டியுள்ளார் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான ஒமர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top