வில்சன் கொலை வழக்கில் தவ்பீக், சமீமுக்கு 10 நாள் போலீஸ் காவல்!

வில்சன் கொலை வழக்கில் தவ்பீக், சமீமுக்கு 10 நாள் போலீஸ் காவல்!

in News / Local

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான அல்துல் சமீம், தவுபீக் ஆகியோரை 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கன்னியாகுமரி மாவட்ட முதன்மை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடி யில் கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக திருவிதாங்கோடு அப்துல் சமீம்(32), இளங்கடை தவுபீக்(28) ஆகியோர், கடந்த 14-ம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பி யில் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், இருவரும் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இருவர் மீதும் உபா சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், இவ்வழக்கு விசாரணை நாகர்கோவில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான அல்துல் சமீம், தவுபீக் ஆகியோர், நாகர்கோவில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இருவரையும் 28 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் தாக்கல் செய்தனர். இந்த மனு மீது, இன்று விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அருள்முருகன் அறிவித்திருந்தார்.

முன்னதாக, கொலையாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா எதிர்ப்பு தெரிவித்தார். "இரு வரையும் 28 நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கக்கூடாது. ஏற்கெனவே தவுபீக் காணாமல் போனது குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு உரிய முகாந்திரம் இல்லை" என்று வாதிட்டார்.

28 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டிருந்த நிலையில் ல்துல் சமீம், தவுபீக் ஆகியோரை 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top