குமரி மாவட்டம், பிளஸ்-2 பொதுத்தேர்வில் 94.81 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி!

குமரி மாவட்டம், பிளஸ்-2 பொதுத்தேர்வில் 94.81 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி!

in News / Local

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் நடந்து முடிந்த பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் குமரி மாவட்டத்தில் உள்ள 4 கல்வி மாவட்டங்களுக்கு உட்பட்ட 244 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 70 மாணவர்களும், 12 ஆயிரத்து 489 மாணவிகளுமாக மொத்தம் 23 ஆயிரத்து 559 பேர் தேர்வு எழுதினார்கள். அவர்களில் 10 ஆயிரத்து 187 மாணவர்களும், 12 ஆயிரத்து 150 மாணவிகளும் ஆக மொத்தம் 22 ஆயிரத்து 337 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.81 ஆகும். எப்போதும் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்

கல்வி மாவட்டம் வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 70 பள்ளிகளை சேர்ந்த 7462 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 7294 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் 19 அரசு பள்ளிகளை சேர்ந்த 2088 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 2027 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 97.08 ஆகும். 18 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 3249 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியதில் 3169 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 97.54 ஆகும். 2 சிறப்பு பள்ளிகளை சேர்ந்த 16 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியதில் 16 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 100 ஆகும். 31 மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 2109 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 2082 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 98.72 ஆகும்.

தக்கலை கல்வி மாவட்டத்தில் 78 பள்ளிகளை சேர்ந்த 6378 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதிபதில் 6163 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இதில் 18 அரசு பள்ளிகளை சேர்ந்த 1058 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களில் 1010 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 95.46 ஆகும். 19 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 2971 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியதில் 2842 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளிகள் 95.66 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன. 11 சுயநிதி பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் 959 பேர் தேர்வு எழுதியதில் 941 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பள்ளிகள் 98.12 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன. 30 மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 1390 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியதில் 1370 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 98.56 ஆகும்.

குழித்துறை கல்வி மாவட்டத்தில் 46 பள்ளிகளை சேர்ந்த 4055 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியதில் 3946 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் 10 அரசு பள்ளிகளை சேர்ந்த 1018 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களில் 985 பேர் தேர்ச்சி பெற்று, 96.76 சதவீதம் தேர்ச்சியை எட்டியுள்ளனர். 16 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 1622 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 1565 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் இந்த பள்ளிகள் 96.49 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. 20 மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 1415 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியதில் 1396 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பள்ளிகள் 98.66 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

திருவட்டார் கல்வி மாவட்டத்தில் உள்ள 50 பள்ளிகளை சேர்ந்த 5095 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களில் 4934 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் 11 அரசு பள்ளிகளை சேர்ந்த 998 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களில் 962 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 96.39 ஆகும். 18 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 2821 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 2702 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த பள்ளிகள் 95.78 சதவீதம் தேர்ச்சியை எட்டியுள்ளன. 20 மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 1276 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியதில் 1270 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பள்ளிகள் பெற்ற சதவீதம் 99.53 ஆகும்.

94.81 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ள குமரி மாவட்டம் மாநில அளவில் 6-வது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த கல்வி ஆண்டில் (2017-2018) குமரி மாவட்டம் பெற்றிருந்த தேர்ச்சி சதவீதம் 95.08 ஆகும். அப்போது மாநில அளவில் 11-வது இடத்தை பெற்றிருந்தது. ஆனால் கடந்த கல்வி ஆண்டைவிட இந்த கல்வி ஆண்டு 0.27 சதவீதம் குறைவாக பெற்றிருந்தாலும் தரவரிசையில் குமரி மாவட்டம் முன்னிலை பெற்றுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top