தென்தாமரைகுளம் பெரியம்மன் கோயிலில் 17 பவுன் நகை 1கிலோ வெள்ளி திருட்டு

தென்தாமரைகுளம் பெரியம்மன் கோயிலில் 17 பவுன் நகை 1கிலோ வெள்ளி திருட்டு

in News / Local

கன்னியாகுமரி மாவட்டம்:

குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பெரியம்மன் கோயிலின் கதவை உடைத்து 17 பவுன் தங்கநகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

தென்தாமரைகுளத்தில் 150 ஆண்டு பழைமையான அம்மன் கோயில் உள்ளது.மூலவராக பெரியம்மன் உள்ளார்.கடந்த திங்கட்கிழமை பூஜை முடிந்து கோயில் நடையடைக்கப்பட்டது.இந்நிலையில் அந்த ஊரை சேர்ந்த கோபிதுரை என்பவர் நேற்று காலை சாமிகும்பிட வந்துள்ளார்.அப்போது பெரியம்மன் கோயில் கிழக்கு கதவு உடைந்த நிலையில் காணப்பட்டது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கோபிதுரை கோயில் பூஜாரி பாலனுக்கும் தகவல் கொடுத்தார்.இதனையடுத்து கோயில் நிர்வாககுழு தலைவர் துரைலிங்கம் மற்றும் ஊர்பொதுமக்கள் கோயிலில் திரண்டனர்.இதனையடுத்து தென்தாமரைகுளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் கொள்ளை நடந்த கோயிலை ஆய்வு செய்தனர்.

நகைதிருட்டு :

கோயிலில் மூலவராக உள்ள பெரியம்மன் கழுத்தில் கிடந்த 16 பவுன் எடையுள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கபட்டுள்ளது.மேலும் கண்மலர்,வெள்ளி கொலுசு,காப்பு போன்றவற்றை கொள்ளையடித்துள்ளனர்.பழைய வெள்ளி காப்புகளை வெளியே துக்கிவீசிய கொள்ளையர்கள் மதுகுடித்து விட்டு பான்பராக் போட்டு மென்று கோயில் சுவரில் துப்பியுள்ளனர்.கோயில் மடபள்ளியில் உள்ள பீரோவை உடைத்து உள்ளே இருந்த துணிகளை வீசிஎறிந்துவிட்டு கோயில் முன்பு இருந்த உண்டியலை உடைக்க முயன்று முடியாததால் சேதபடுத்திவிட்டு கோயில் மதில் சுவரில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடிவிட்டு தப்பிசென்றுள்ளனர்.

கண்காணிப்பு கேமிரா ஆய்வு :

கோயிலில் கண்காணிப்பு கேமிரா பொருத்தபடாததால் கொள்ளையர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் கோயிலில் கிழக்கு பக்கத்தில் உள்ள தனியார் வெல்டிங் ஒர்க்ஷாப்பில் உள்ள கேமிரா மற்றும் தாமரை சக்தி மஹாலில் உள்ள கேமிரா மற்றும் தென்தாமரைகுளம் வடக்கு ஜங்ஷனில் உள்ள கேமிராவை போலீசார் ஆய்வு செய்ததில் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் தென்தாமரைகுளம் பஞ்சாயத்து அலுவலகத்தை கடந்து இருசக்கர வாகனம் சென்றது தெரியவந்துள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top