குமரியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

குமரியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

in News / Local

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 32 பேர் பாதிக்கப்பட்டனர்.  இதனால் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 907 ஆக உயர்ந்தது. இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 331 ஆகும்.கடந்த சில நாட்களுக்கு முன் குஜராத் மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் சுற்றுலா வந்த பயணிகளில் 75 வயது மூதாட்டி ஒருவர் திடீரென இறந்தார். அவருக்கு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. 

குமரியில் நேற்று 21 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த 60 வயது ஆண் நேற்று பிற்பகலில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பூமத்திவிளை தெங்கன்குழியைச் சேர்ந்த 77 வயது பெண்ணும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 333 ஆக உயர்ந்துள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top