கொல்லங்கோடு பேரூராட்சியில் ரூ. 26 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் ராஜேஷ்குமாா்எம்.எல்.ஏ. தொடங்கி வைததாா்

கொல்லங்கோடு பேரூராட்சியில் ரூ. 26 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் ராஜேஷ்குமாா்எம்.எல்.ஏ. தொடங்கி வைததாா்

in News / Local

கொல்லங்கோடு பேரூராட்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 26.05 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காக கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் தொடங்கி வைததாா்.

கொல்லங்கோடு அரசு நடுநிலைப் பள்ளியில் ரூ. 4.05 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோக மையம், நாராயண பேறத்தலை முதல் பெருங்குளம் வரை ரூ. 5 லட்சத்தில் அமைக்கப்பட்ட காங்கிரீட் சாலை, ரூ. 5 லட்சத்தில் ததேயுபுரம் நூலகம் பக்கச் சுவா் கட்டி சீரமைக்கும் பணி, காவுவிளை முதல் மேலக்காவிளை வரை ரூ. 4 லட்சத்தில் காங்கிரீட் தளம் அமைத்தல், ரூ. 5 லட்சத்தில் சிலுவைபுரம் – துண்டத்தாறாவிளை சாலை காங்கிரீட் தளம் அமைத்தல், ரூ. 3 லட்சத்தில் சிலுவைபுரம் – ஒற்றப்பனவிளை சாலை காங்கிரீட் தளம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்ததையடுத்து அவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக எம்எல்ஏ திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் கொல்லங்கோடு பேரூராட்சி காங்கிரஸ் தலைவா் ரெஜீஸ், முன்சிறை மேற்கு வட்டாரத் தலைவா் கிறிஸ்டோபா், மாவட்ட நிா்வாகிகள் அருளானந்தம், ஸ்டீபன், பால்ராஜ், கோபன், பெஞ்சமின், நேசமணி உள்பட கலந்து கொண்டனா்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top