நாகர்கோவிலில் விதிமுறை மீறி கட்டப்பட்ட 4 கட்டிடங்களுக்கு சீல்!

நாகர்கோவிலில் விதிமுறை மீறி கட்டப்பட்ட 4 கட்டிடங்களுக்கு சீல்!

in News / Local

நாகர்கோவில் நகரில் விதிகளை மீறி சில கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு நாகர்கோவில் நகரில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு ‘சீல்‘ வைத்து நடவடிக்கை எடுக்க உள்ளூர் திட்டக்குழுமத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.

நாகர்கோவிலில் விதிமுறை மீறி கட்டப்பட்ட 4 கட்டிடங்களுக்கு சீல்!

அதன்படி நேற்று மதியத்துக்கு பிறகு உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலாளர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் விதிமீறல் கட்டிடங்களுக்கு ‘சீல்‘ வைக்கும் பணியை மேற்கொண்டனர்.

முதலில் கலெக்டர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள ஒரு ஓட்டலுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது. பின்னர் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள ஒரு வணிக நிறுவன கட்டிடம், கே.பி.ரோட்டில் செயல்பட்டு வரும் ஒரு ரத்த பரிசோதனை நிலையம், வெட்டூர்ணிமடம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஆகியவற்றுக்கும் ‘சீல்‘ வைக்கப்பட்டது.

அதிகாரிகளின் இந்த திடீர் நடவடிக்கையால் ‘சீல்‘ வைக்கப்பட்ட கட்டிடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சில வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் ‘சீல்‘ வைக்க வந்த அதிகாரிகளிடம். கால அவகாசம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் அதிகாரிகள் கோர்ட்டு உத்தரவு மீரா முடியாது என்று கூறி கால அவகாசம் அளிக்க மறுத்து விட்டனர்.

1 Comments

  1. போத்திஸ் அனுமதிபெறாமல் கட்டிடம் கட்டினான் என்று உள்ளூர் திட்டக்குழுமத்தில் இருந்து இடித்தற்கு பாராட்டுக்கள்,நேர்மை ,வெண்டைக்காய் ,கத்திரிகாய்ன்னு பேசுறாங்களே ,இதே உள்ளூர் திட்ட குழுமத்தில் ,திமுககாரன் விவசாய விளைநிலங்களை கள்ள பட்டா போட்டு வித்து,போலியான வரைபட பாதை அமைச்சு (அது போலியான பாதைன்னு அப்ப இதே உள்ளூர் திட்ட குழுமத்துக்காரங்கதான் தகவல் அறியும் உரிமையில் கொடுத்த லெட்டர் இருக்கு) என் விவசாய நிலத்துக்கு போற பாதையை அடைச்சு,அதை திறக்கணும்னா பிச்சை கேடகிறான.முறையான ஆவணம் இல்லாம உள்ளூர் திட்ட குழுமத்திடம் அனுமதிபெறாம போலியான பாதை அமைச்சு போக்குவரத்தை தடை செய்து இருக்கிறான்னு,நான் கொடுத்த புகார் எண் ந .எண்.448/2017/ நா உ திநாள் 12.2017 இன்னமும் உள்ளூர் திட்ட குழுமத்தில் 2 வருஷமா தூங்கிட்டு இருக்கு.ஆனா போத்தீஸ் விவகாரத்தில ஏன் இவ்வுளவு அவசரம்.இதே புகார் கலக்ட்டர் அலுவலகத்திலும் எந்த வித நடவடிக்கையும் இல்லை.பத்திரிகைகள் ,சில அரசு அதிகாரிகள் எல்லாமே காசுக்காக எதைவேண்டுமாலும் செய்பவர்கள் .அவர்களால்தான் இந்த மாதிரி பிரச்னை வருகிறது .

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top