குமரிக்கு மேலும் 540 துணை ராணுவ வீரர்கள் வருகை

குமரிக்கு மேலும் 540 துணை ராணுவ வீரர்கள் வருகை

in News / Local

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக குமரி மாவட்டத்துக்கு மேலும் 540 துணை ராணுவ வீரர்கள் வந்தனர்.

தமிழகத்தில் பொது தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஏற்கனவே 65 துணை ராணுவ படை ஜெய்ப்பூர், மணிப்பூர், குஜராத், ஜார்கண்ட் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழகத்துக்கு வந்தது.

அதே சமயத்தில் 90 பேர் அடங்கிய ஒரு கம்பெனி எல்லை பாதுகாப்பு படையினரும் வந்திருந்தனர். அவர்கள் தற்போது தேர்தல் பாதுகாப்பு பணியிலும், பறக்கும் படையினரிடமும் சேர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து 6 கம்பெனி துணை ராணுவம் சிறப்பு ரெயில் மூலம் நேற்று நாகர்கோவிலுக்கு வந்தது. ஒரு கம்பெனியில் 90 பேர் என மொத்தம் 540 பேர் வந்திருந்தனர். 

அவர்கள் அனைவரும் நாகர்கோவில், குளச்சல், தக்கலை, விளவங்கோடு மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் முகாமிட்டு தங்கியுள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top