நாகர்கோவில் அன்னை தெரசா அக்ரோடெக் விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில் நிலமற்ற விவசாயிகளுக்கு மூன்றாம் கட்டமாக விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதே நமது அரசின் நோக்கமாக உள்ளது. அதனை நடைமுறைபடுத்தும் விதமாக, நம் மாவட்டத்தில் நிலமற்ற விவசாயிகளை கண்டறிந்து, அவர்களுக்கு இலவசமாக இரண்டு ஆடுகளை நாகர்கோவில் அன்னை தெரசா அக்ரோடெக் விவசாயிகள் உற்பத்தி நிறுவனம் வழங்கி வருகிறது. இதன் மூலம் நிலமற்ற விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையில் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மூன்றாம் கட்டமாக விவசாயி ஒவ்வொருவருக்கும் இன்று தலா இரண்டு ஆடுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இதனை பெற்றுக்கொண்ட விவசாயிகள் கூறியதாவது :
நாகர்கோவில் அன்னை தெரசா அக்ரோடெக் விவசாயிகள் உற்பத்தி நிறுவனம் இரண்டு ஆடுகளை வழங்கியுள்ளனர். இவற்றை வளர்க்கும் முறையும் எங்களுக்கு பயிற்சி அளிப்பதாக கூறியுள்ளனர். மேலும், மருத்துவ உதவிகளையும் அவர்கள் இலவசமாக வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்
0 Comments