மது போதையில் தவறாக நடக்க முயன்ற தந்தை.. அம்மிக்கல்லை போட்டு கொன்ற மகள்!

மது போதையில் தவறாக நடக்க முயன்ற தந்தை.. அம்மிக்கல்லை போட்டு கொன்ற மகள்!

in News / Local

மது போதையில் பெற்ற மகளையே பாலியல் தொந்தரவுவில் ஈடுபட்ட அப்பாவை மகளே தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்று இருக்கிறார். இந்த மோசமான சம்பவம் சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அருகே நடந்திருக்கிறது.

மது போதை எவ்வளவு மோசமானது என்பதற்கு எத்தனையே உதாரணங்களை நாம் சொல்ல முடியும். 'வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு கேடு" என்று எழுதப்பட்ட வாசகத்துடன் விற்கப்படும் மதுவால் பல குடும்பங்கள் தமிழகத்தில் சீரழிந்து வருகிறது. தினமும் நடக்கும் பல கொலைகள், வன்முறைகள், விபத்துக்களுக்கு பின்னணியில் மது நிச்சயம் இருக்கும். இந்நிலையில் சேலம் அருகேயும் ஒரு குடும்பத்தை மோசமாக சிதைத்திருக்கிறது மது. மதுவால் ஒரு தந்தை வாயிலே சொல்லக்கூசும் அளவுக்கு தவறுகளை செய்யப்போய், உயிரை விட்டிருக்கிறார்.

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அருகே ராஜாகோவில் வளவு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மது போதையில் பெற்ற மகளையே பாலியல் தொந்தரவுவில் அப்பா ஈடுபட்டிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த மகள் அப்பாவின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவத்தின் கோரப் பின்னணியை இப்போது பார்ப்போம்.

ஜலகண்டபுரம் அருகே ராஜா கோவில் வளவு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் படவெட்டி. இவர் அந்த பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர்க்கு தனா என்ற மனையும் இரண்டு மகள்கள் உள்ளனர். கூலி வேலை செய்யும் படவெட்டி கடந்த சில ஆண்டுகளாக சரியாக வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையாகி குடித்துவிட்டு தினமும் ஊர் சுற்றி வந்துள்ளார்.

படவெட்டி குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்ததால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தில் சண்டை வந்து உள்ளது. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன அவரது மனைவி கருத்து வேறுபாடு ஏற்பட்டு ல் கடந்த 4ஆண்டு முன்பாக கோவித்து கொண்டு அருகில் உள்ள அவரது அம்மா வீட்டுக்கு சென்று வசித்து வருகிறார்.

இதனால் அடிக்கடி படவெட்டி மனைவியை பார்க்க சென்றுள்ளார்.. அப்படித்தான் சம்பவத்தன்ன முழு மதுபோதையில் மனைவியை பார்க்க சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்த மகளிடம் படவெட்டி தவறாக நடந்துள்ளார் இதனை பார்த்த மனைவி தனா கண்டித்துள்ளார் மேலும் ஆத்திரத்தில் மகளும் அம்மாவும் சேர்ந்து பலமாக தாக்கி அருகில் கிடந்த அம்மிக்கல் தலையில் போட்டு கொலை செய்தனர்.

மேலும் இருவரும் ஜலகண்டபுரம் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். ஓமலூர் டிஎஸ்பி .பாஸ்கரன் மற்றும் ஜலகண்டபுரம் காவல் ஆய்வாளர் ரவி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகினர். மேலும் இறந்து கிடந்த படவேட்டி உடலை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவ மனைக்கு பிரோத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தாய் மகள் இருவரையும் கைது செய்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரப்பாக காணப்பட்டது..

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top