குமரிமாவட்டத்தில் அக்ரோடெக் விவசாய உற்பத்தியாளர்கள் தனது நிறுவன குழுவினருக்கு ஆடுகளை இலவசமாக வழங்கினர்.
குமரிமாவட்டத்தில் அக்ரோடெக் விவசாய உற்பத்தியாளர்கள் தனது நிறுவன குழு விவசாயிகளுக்கு ஆடுகளை இலவசமாக வழங்கினர். ஆடுகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் முறைகளையும் விவசாயிகளுக்கு கற்றுக்கொடுத்தனர். விவசாயிகளின் பொருளாதாரத்தை இதன் மூலம் உயர்த்தி கொள்ள வேண்டும் என அக்ரோடெக் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் கேட்டுக்கொண்டு 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு தலா இரண்டு ஆடுகள் இலவசமாக வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது…
அக்ரோடெக் விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலமற்ற விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் 50க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். அந்த குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு தலா இரண்டு ஆடுகள் கொடுக்கப்படுகின்றன. அந்த ஆடுகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் முறைகள் விவசாயிகளுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டு, நிலமற்ற விவசாயிகளுக்கு தற்சார்பு பொருளாதாரத்தை அக்ரோடெக் விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலமற்ற விவசாயிகளை தற்சார்பு பொருளாதாரத்தில் தேசிய அளவில் முன்னேறிய, மாதிரி விவசாயிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளது. அவர்களது உற்பத்தி பொருளை சந்தைப்படுத்த பல்வேறு தொழிற்நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் நன்கு பயனடைவர். இதன் தொடர்ச்சியாக நமது மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஆடுகள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அக்ரோடெக் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் தங்கள் பொருளாதாரத்தை இதன் மூலம் உயர்த்தி கொள்ள முடியும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆடு வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அகில பாரத இந்து மகா சபாவின் தேசிய துணைத் தலைவர், தமிழ் மாநில தலைவர்.டாக்டர் தா.பாலசுப்பிரமணியன் ஜி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அக்ரோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.மாணிக்கம் அவர்கள் தலைமை தாங்கினார்.அகில பாரத இந்து மகா சபா மாநில செயலாளர் திரு.இராம.நிரஞ்சன் முன்னிலை வகித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த.திருமதி.சுசீலா பாய் மற்றும் திரு சரவணன், திரு. L. நீலகண்ட ஜெகதீஷ் இறச்சகுளம் ஊராட்சி மன்ற தலைவர், திரு.ஶ்ரீகண்டன். மாவட்ட துணை தலைவர், திரு.M.ஶ்ரீதரன் கிழக்கு மாவட்ட செயலாளர், திரு S.ராஜா மாவட்ட செயலாளர், திரு. T. மணிகண்டன் தோவாளை ஒன்றிய தலைவர், திரு.B மணிகுமார் தோவாளை ஒன்றிய செயலாளர், நம்பி கிருஷ்ண ஐயர் அர்ச்சகரணி தோவாளை ஒன்றிய தலைவர் மற்றும் தன்னார்வலர்கள், பொதுமக்களும் என பலர் கலந்து கொண்டனர்.
0 Comments