கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிதாக சிறப்பு மருத்துவ வசதி ஏற்பாடுகளுடன் ஆம்புலன்ஸ் வருகை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிதாக சிறப்பு மருத்துவ வசதி ஏற்பாடுகளுடன் ஆம்புலன்ஸ் வருகை

in News / Local

குமரிமாவட்டத்திற்கு கூடுதலாக மூன்று 108 ஆம்புலன்ஸ் வாகனம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆம்புலன்ஸ் நேற்று குமரிக்கு வருகை புரிந்ததை அடுத்து ஆம்புலன்ஸை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் 150 பேருக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களை வீடுகளிலிருந்து மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல தற்போது காணப்படும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் போதாது என்பதால் கூடுதலான 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

தற்போதைய நிலையில் உறுதி செய்யப்பட்ட ஒருவர் அவரது வீட்டில் இருந்து அழைத்துச் செல்ல நீண்ட நேரத்திற்குப் பின்னர் தான் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதாகவும் இதனால் அந்த நபர் மன சோர்வுக்கு ஆளாகி உடல் நிலை மேலும் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்தது இந்நிலையில் தமிழக அரசு கூடுதலாக மூன்று ஆம்புலன்ஸ் வாகனங்களை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வழங்குவதாக அறிவித்தது இதில் இரண்டு வாகனங்கள் நேற்று முதல் இயங்கத் துவங்கியது.

நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே முன்னிலை வகித்தார். மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் ஜாண்தங்கம், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணையதலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் போஸ்கோராஜ், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் சுகந்திராஜகுமாரி, கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் கிளாரன்ஸ் டேவி, மருத்துவ கண்காணிப்பாளர் அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவர் ஆறுமுகவேலன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செந்தில்குமார், குமாரப்பாண்டியன், சங்கரன் நாராயணன் அரசு வக்கீல் சுந்தரம், குமரி மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் ஷாஜகான், நிர்வாகிகள் ஆனந்தன், ரமேஷ், 108 ஆம்புலன்ஸ் மண்டல மேலாளர் ரஞ்சித் விஸ்வநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெபின் கிங்ஸ்டன்ராஜ், தொழில் அதிபர் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top