பூதப்பாண்டி பேரூராட்சியில் ரூ.50 லட்சம் செலவில் அலங்கார தரை கற்கள் பதிக்கும் பணி ஆஸ்டின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்…!

பூதப்பாண்டி பேரூராட்சியில் ரூ.50 லட்சம் செலவில் அலங்கார தரை கற்கள் பதிக்கும் பணி ஆஸ்டின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்…!

in News / Local

பூதப்பாண்டி பேரூராட்சியில் போலீஸ் நிலையம் அருகில் இருந்து சாட்டுபுதூருக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் ஆஸ்டின் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று அவர் சென்னையில் பேரூராட்சிகளின் இயக்குனரை நேரில் சந்தித்து சாட்டுப்புதூர் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

அதன்படி சாலையில் அலங்கார தரைக்கற்கள் அமைக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின. இந்த பணியை ஆஸ்டின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், தோவாளை ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன், பூதப்பாண்டி பேரூர் செயலாளர் ஆலிவர்தாஸ், செல்வம், ஒன்றிய பொருளாளர் ஜார்ஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஆஸ்டின் பெனட், பூதப்பாண்டி கிளை செயலாளர் அய்யப்பன், முத்தம்மாள், ராஜன், மதி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top