கொரோனா வைரஸை கொல்லும் கருவி பெங்களூர் நிறுவனம் கண்டுபிடிப்பு - ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம்?

கொரோனா வைரஸை கொல்லும் கருவி பெங்களூர் நிறுவனம் கண்டுபிடிப்பு - ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம்?

in News / Local

கொரோனா வைரஸைக் (CORONAVIRUS) கொல்லும் சக்தி வாய்ந்த ஒரு சாதனத்தை பெங்களூரை சேர்ந்த நிறுவனம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெங்களூரில் உள்ள டி ஸ்கலீன், சென்டர் அட்வான்ஸ்ட் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் (CARD) அமைப்பின் ஆராய்ச்சி பிரிவு, கொரோனா வைரஸை நடுநிலையாக்கும் சக்திவாய்ந்த ஒரு சாதனத்தை கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளது. SHYCOCAN அல்லது Scalene Hypercharge Corona Canon - எனப்படும் இந்த சாதனம் இப்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது .

இந்த கருவியானது கொரோனா வைரஸை செயலிழக்க செய்யும் திறன் கொண்டது. ஒரு சிறிய டிரம் போல கட்டமைக்கப்பட்டுள்ள இந்த கருவியை அலுவலகங்கள், பள்ளிகள், மால்கள், ஹோட்டல்கள், விமான நிலையங்கள் அல்லது மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்வதற்கான எந்தவொரு பகுதிகளிலும் வைத்துக்கொள்ளலாம். கொரோனா வைரஸில் இருக்கும் ஸ்பைக் - புரோட்டீன் அல்லது எஸ்-புரதத்தை நடுநிலையாக்குவதில் இது 99.9 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

கொடிய வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், கொரோனா பாதிக்கப்பட்ட நபர் இந்த கருவி இருக்கும் அறைக்குள் நுழைந்தால், தும்மும் போது அல்லது இருமும் போது ஏரோசோல்களில் இருக்கும் வைரஸின் ஆற்றலை ஷைகோகன்(Shycocan) கருவி நடுநிலையாக்கும். இதனால் காற்று அல்லது மேற்பரப்பு வழியாக பரவுவதைக் குறைக்கிறது. அதிகாரிகளின் தகவலின்படி உற்பத்திக்கான ஒப்புதல் கடந்த வாரம் கிடைத்தது. செலவு மற்றும் உற்பத்தி உரிம உரிமையாளர்களைப் பொறுத்து இதன் விலை நிர்ணயிக்கப்படும் என்றும் மருத்துவர் விஜய் குமார் கூறியுள்ளார்.

இந்த கருவியானது வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, சுதந்திர தினத்தன்று அறிமுகப்படுத்தப்படும் என்று சில பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. இதில் எவளவு உண்மை உள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top