குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராடுபவர்களை கண்டித்து நாகர்கோவிலில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்!

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராடுபவர்களை கண்டித்து நாகர்கோவிலில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்!

in News / Local

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை முழுமையாக படிக்காமல் போராட்டம் நடத்தி வருவதாக பா.ஜனதா சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

எனவே குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை கண்டித்தும், குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாகவும் குமரி மாவட்ட பா.ஜனதா சாா்பில் நாகர்கோவிலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மீனாட்சிபுரத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

தமிழக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கலந்துகொண்டு பேசினார். அப்போது, “குடியுாிமை சட்ட திருத்தத்தால் யாருக்கும் பாதிப்பு கிடையாது. ஆனால் அதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமலேயே பலபேர் போராட்டம் நடத்துகிறார்கள். மத்தியில் பா.ஜனதா ஆட்சி செய்வது பிடிக்காமல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரங்களை செய்து வருகிறார். குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான ேபாராட்டமானது உள்ளாட்சி தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் நாகர்கோவில் நகரசபை முன்னாள் தலைவி மீனாதேவ் மற்றும் நிர்வாகிகள் எம்.ஆர்.காந்தி, முத்துராமன், தேவ், நாகராஜன், ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

போராட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top