மறைந்த கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார் அவர்களின் உடல் சென்னையிலிருந்து குமரி வரை கொண்டு வரும்போது அவரது உடலுக்கு பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது!

மறைந்த கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார் அவர்களின் உடல் சென்னையிலிருந்து குமரி வரை கொண்டு வரும்போது அவரது உடலுக்கு பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது!

in News / Local

மறைந்த கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினரும்,தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவரும், வசந்த் அன் கோ உரிமையாளருமான எச்.வசந்தகுமார் அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு பின்பு உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது பூர்வீக இடத்தில் அப்பா,அம்மா கல்லறை தோட்டம் இருக்கும் இடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள்,ஆட்சியர்,எம்.பி,எம் எல் ஏ கள் என காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள் . எச்.வசந்த குமார் எம்.பி. கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 ந் தேதி அனுமதிக்கப்பட்டார் . அவருக்கு கொரோனா தொற்று குணமடைந்த நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு நிமோனியா காய்ச்சல் வந்தது.அவருக்கு டாக்டர்கள் அதிதீவீர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மூன்று தினத்திற்கு முன் இரவு உயிர் பிரிந்தது . பின்னர் அவரது உடல் தி.நகர் நடேசன் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது . அதன் பின்னர் அவரது உடல் வேனில் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.

வீட்டில் இருந்து புறப்பட்ட அவரது உடலை சுமந்து சென்ற வேன் , அவர் முதலில் தி.நகர் பஸ் நிலையம் அருகே ஆரம்பித்த வசந்த் அன்கோ ஷோரூம் கொண்டு செல்லப்பட்டு அங்கு வேன் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது . காமராஜர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார் வசந்தகுமார் . அவர் வழியில் ஏழை எளிய மக்கள் கல்வி தொடர வசதியாக ஏராளமானஉதவிகளை செய்தார் வசந்தகுமார். எனவே திருமலைப்பள்ளி சாலையில் உள்ள காமராஜரின் நினைவு இல்லத்தின் முன்பு அந்த வேன் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் அங்கிருந்து புறப்பட்டு தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டது . அங்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஷ்னிக் , காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி , திருநாவுக்கரசர் எம்.பி , புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் அங்கிருந்து நேராக வசந்தகுமாரின் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்துக்கு எடுத்து செல்லப்பட்டது . வழிநெடுக பல்வேறு இடங்களில் அவரது வேன் நிறுத்தப்பட்டு ஏராளமான பேர் அஞ்சலி செலுத்தினார்கள். வசந்தகுமார் காலமான செய்தி கிடைத்ததுமே அவரது சொந்த கிராமமான அகஸ்தீஸ்வரம் சோகத்தில் மூழ்கியது. அவரது உடலுக்கு ஏராளமான பேர் கியூ வில் நின்று தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் , காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள் . இதன் பின்னர் வசந்தகுமாரின் உடல் அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட வேனில் எடுத்து செல்லப்பட்டது. வசந்தகுமாரின் உடல் அவரது தாய் தந்தையர் அடக்கம் செய்யப்பட்ட அவர்களது குடும்ப தோட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டது . அங்கு வசந்தகுமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.அவர் வாழ்ந்த வாழ்க்கை வெற்றி என்ற பாடமாகவே அடுத்த தலைமுறையை சென்று அடைந்துள்ளது.

தவிக்க விட்டுட்டீங்களே அண்ணாச்சி!!!!

பாமரனா பிறந்த அண்ணாச்சி பாராளுமன்றத்தில் வெற்றி பெற்று நிமிர்ந்து நின்றது என்னாச்சி!!!

பாராளுமன்றத்தில் மூத்த தமிழ் உறுப்பினர் நீங்க தான் அண்ணாச்சி…
பாராளுமன்றத்தில தமிழ் நாட்டு உறுப்பினர் 39 பேரு நின்ற வரிசையிலும் முதல் ஆளா வந்தது என்னாச்சி!!!

காமராஜரின் கொள்கையை கடைப்பிடிச்சி வென்ற தொண்டனும் நீங்க தான் அண்ணாச்சி!!!
கொடுத்து சிவந்த கொடை வள்ளல் கரமும். கடின உழைப்பு கொடுத்த கள்ளம் கபடமற்ற தலைவரும். நீங்க தான் அண்ணாச்சி!!!

குமரி அன்னைக்கு புகழ் சேர்த்து கொடுத்த குமரி தாயின் புதல்வர்களில் கடைக்குட்டி நீங்க தான் அண்ணாச்சி!!!

வசந்த்&கோ என்பது பெயர் அல்ல அண்ணாச்சி..
அடுத்த தலைமுறை புரட்டி புரட்டி தேடி படிக்கும் புரட்சி நீங்க எங்க அண்ணாச்சி!!!

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top