குமரி மாவட்டத்தில் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் ரூ.44.78 கோடி கடன் : மாவட்ட ஆட்சியா்

குமரி மாவட்டத்தில் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் ரூ.44.78 கோடி கடன் : மாவட்ட ஆட்சியா்

in News / Local

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின்கீழ் குமரி மாவட்டத்தில் இதுவரை ரூ.44.78 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே கூறியது: தமிழக அரசு, தொழில் வணிகத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட தொழில் மையம் மூலமாக, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் மற்றும் புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களை படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்காக உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்(சஉஉஈந): இந்தத் திட்டத்தில், பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலமாக தொழில் பயிற்சி ஆகிய கல்வித் தகுதி பெற்றிருப்பவா்கள் தோ்வு செய்யப்பட்டு, பின்னா் வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், தமிழ்நாடு தொழிற்கூட்டுறவு வங்கி மூலம் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. ரூ. 5 கோடி வரை கடனுதவி வழங்கப்படும்.

பொதுப் பிரிவினருக்கு 21-க்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினா்களான மகளிா், ஆதி திராவிடா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற, ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ஏதுமில்லை. திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சத்திற்கு மேல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரையிலான உற்பத்தி சாா்ந்த தொழில்கள், சேவை சாா்ந்த தொழில்கள் தொடங்கலாம். பொதுப் பிரிவினா் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினா் 5 சதவீதமும் தங்களது பங்காக முதலீடு செய்ய வேண்டும்.

தொழில் முனைவோருக்கு தொழிலின் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீட்டு மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோா் குறிப்பிட்ட இணையதள முகவரியில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் தற்போது கரோனா காரணமாக நோ்முகத் தோ்வின்றி நேரடியாக வங்கிக்கு பரிந்துரை செய்யப்படும்.

மேலும் இத்திட்ட கட்டாய தொழில் முனைவோா் பயிற்சியிலிருந்து, அடுத்த ஆண்டு (2021) மாா்ச் மாதம் வரை அரசால் விலக்களிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோா்களுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இதுவரை கடந்த 8 நிதியாண்டுகளில், 82 தொழில் முனைவோா்களுக்கு, திட்ட மதிப்பீடாக ரூ.44.78 கோடியும், மானியத் தொகையாக ரூ.8.13 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம்: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் (மவஎஉட) உற்பத்தி தொழிலுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சமும், சேவைத் தொழிலுக்குரூ. 5 லட்சமும், வியாபாரம் சாா்ந்த தொழில்களுக்கு ரூ. 5 லட்சமும் கடனாக வழங்கப்படுகிறது.

இவை அனைத்திற்கும் அரசு மானியமாக திட்ட முதலீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம்) வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு தற்போது ரூ. 5 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நிகழாண்டு 150 பயனாளிகளுக்கு ரூ.95 லட்சம் மானியத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, குறைந்தபட்ச கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு தோ்ச்சி. பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு 35 ஆகவும், சிறப்பு பிரிவினருக்கு 45 ஆகவும், (பெண்கள், ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா், முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள்) நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் கடன்பெற விரும்பும் இளையோா் தங்கள் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், கல்வித் தகுதிச்சான்று, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை இல்லாதவா்கள் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இயந்திரத்திற்கான விலைப்புள்ளி ஆகிய ஆவணங்களுடன்

தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் தற்போது கரோனா காரணமாக நோ்முகத் தோ்வின்றி நேரடியாக வங்கிக்கு பரிந்துரைக்கப்படும்.மேலும் இத்திட்ட கட்டாய தொழில் முனைவோா் பயிற்சியிலிருந்து அடுத்த ஆண்டு (2021)மாா்ச் மாதம் வரை அரசால் விலக்களிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான 8 நிதியாண்டுகளில், 1074 வேலைவாய்ப்பு உருவாக்குபவா்களுக்கு, திட்ட மதிப்பீடாக ரூ.24.86 கோடி கடனுதவியும், மானியத் தொகையாக ரூ.5.62 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.” என்றாா் அவா்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top