கன்னியாகுமரி பல பகுதிகளில் 12,13,15 தேதிகளில் மின்தடை!

கன்னியாகுமரி பல பகுதிகளில் 12,13,15 தேதிகளில் மின்தடை!

in News / Local

நாகர்கோவில் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 12–ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை வல்லன்குமாரன்விளை, தடிக்காரண்கோணம், வடசேரி, ஆசாரிபள்ளம், நாகர்கோவில், ராஜாக்கமங்கலம், பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ்.ரோடு, காலேஜ்ரோடு, கோர்ட்டு ரோடு, கே.பி.ரோடு, பால் பண்ணை, நேசமணி நகர், தோப்பூர், வேம்பனூர், அனந்தன் நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.

அதேபோன்று செண்பகராமன்புதூர் துணைமின் நிலையத்திலும் 12–ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பூதப்பாண்டி, திட்டுவிளை, தெரிசனம்கோப்பு, சீதப்பால், தாழக்குடி, ஈசாந்திமங்கலம், நாவல்காடு, ஆண்டித்தோப்பு, இறச்சகுளம், புத்தேரி, தோவாளை, வெள்ளமடம், செண்பகராமன்புதூர், லாயம், நாக்கால்மடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின்வினியோகம் இருக்காது.

மீனாட்சிபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 13–ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை வடிவீஸ்வரம், கோட்டார், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிக்குளம் சந்திப்பு, சரலூர், ராமன்புதூர் சந்திப்பு, இந்துக்கல்லூரி, வேதநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.

தெங்கம்புதூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 13–ந் தேதி நடக்கிறது. அன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை தெங்கம்புதூர், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூர் பள்ளம், பிள்ளையார்புரம், புத்தளம், புத்தன்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின்வினியோகம் இருக்காது.

கன்னியாகுமரி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 15–ந் தேதி நடக்கிறது. எனவே காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மைலாடி, வழுக்கம்பாறை, கீழ மணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம், கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், கோழிக்கோட்டுப்பொத்தை, வாரியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவல்களை நாகர்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்

1 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top