சில்லறை வியாபாரிகள் அதிகாலை 2.30 முதல் 5.30 வரை கொள்முதல் செய்ய அனுமதி ஆணையர் ஆஷா அஜித் தகவல்

சில்லறை வியாபாரிகள் அதிகாலை 2.30 முதல் 5.30 வரை கொள்முதல் செய்ய அனுமதி ஆணையர் ஆஷா அஜித் தகவல்

in News / Local

கோட்டார் பஜாரில் அதிகாலை 2.30 மணிமுதல் 5.30 மணிவரை சில்லறை வியாபாரிகள் கொள்முதல் செய்ய நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் அனுமதித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :-

தமிழக அரசின் உத்தரவுப்படி வருகின்ற ஜூன் 7ம் தேதி காலை 6 மணிவரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய மளிகை பொருட்களை உள்ளாட்சி அமைப்புகள் வீடுகளுக்கு நேரடியாக விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

நாகர்கோவில் மாநகரப் பகுதியில் இதனை செயல்படுத்துவது குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து ஆணையர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:-

கோட்டார் பஜார் பகுதியில் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

கோட்டார் பஜார் பகுதியில் சில்லரை வணிகத்திற்கு தடை விதிக்கப்படுகிறது மொத்த வியாபாரம் மட்டுமே செய்யப்பட வேண்டும்.கோட்டார் பஜாரில் உள்ள மொத்த வியாபாரிகள் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் தங்கள் பொருள்களின் இறக்குமதியை இரவு 10 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை மட்டுமே மேற்கொள்ளவேண்டும்.

கோட்டார் பஜாரில் விடியற்காலை 2:30 மணி முதல் 5:30 மணி வரை சில்லறை வியாபாரிகள் கொள்முதல் செய்து கொள்ளலாம்.

காலை 6 மணிக்கு பிறகு கோட்டார் பகுதியில் வியாபாரம் செய்ய தடைவிதிக்கப்படுகின்றன.

ஆகையால் சில்லரை வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை தொலைபேசி மூலமாகவும் வாட்ஸ்அப் மூலமாகவும் மொத்த வியாபாரிகளுக்கு தெரிவித்து அதனை பெற்றுக் கொள்ளவும்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தில் உரிய அனுமதி சீட்டினை பெற்று கோட்டார் பகுதிக்கு செல்லலாம்.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் காலை 6 மணிக்கு முன்னதாக மாநகர பகுதிகளில் இருந்து பொருட்களை பெற்றுக் கொண்டு வெளியே சென்றிருக்க வேண்டும்.

நாகர்கோவில் மாநகரில் 52 வார்டுக்கு தனித்தனியே வாகனம் மூலம் பொருட்களை விநியோகம் செய்ய வியாபாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள், இதன் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

நாகர்கோவில் மாநகர் முழுவதும் பொருட்களை பொது மக்களுக்கு மளிகைப் பொருட்களை விநியோகம் செய்யும் வகையில் 23 சூப்பர் மார்க்கெட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் இதர வியாபாரிகள் அனைவரும் பொதுமக்களிடம் தொலைபேசி வாயிலாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவும் ஆர்டர்களை பெற்று பொருட்களை நேரடியாக வீடுகளுக்கு சென்று வினியோகம் செய்ய வேண்டும்.

மளிகை பொருட்களை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும்.மாநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் காய்கறி , மீன் ,இறைச்சி விற்பனை பல்வேறு பகுதிகளுக்கு வரவில்லை என்று தொடர்ச்சியாக புகார்கள் வந்ததை அடுத்து இதனை கண்காணிக்கும் பொருட்டு ஒவ்வொரு வார்டுகளுக்கும் தனித்தனியே தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் வருவாய் உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top