குமரியில் நிவாரணம் வழங்கக்கோரி 30 இடங்களில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

குமரியில் நிவாரணம் வழங்கக்கோரி 30 இடங்களில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

in News / Local

வருமானவரி செலுத்தாத அனைத்து நடுத்தர, ஏழை மக்களின் குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7500 வீதம் 6 மாதங்களுக்கு ரொக்கமாக வழங்க வேண்டும்,

குடும்பத்தில் உள்ள நபர் ஒருவருக்கு தலா 10 கிலோ உணவு தானியம் வீதம் அடுத்த 6 மாத காலம் வரை இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் குமரி மாவட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் அந்தோணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு, கோட்டார் ரெயிலடி திடல், செம்மாங்குடி ரோடு, வேப்பமூடு, தலைமை தபால் நிலையம், அண்ணா விளையாட்டரங்கம் முன்புறம், வடசேரி அண்ணாசிலை சந்திப்பு, ராணித்தோட்டம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்புறம் ஆகிய இடங்களிலும்,

மாவட்ட பகுதிகளில் கொட்டாரம், தக்கலை, நித்திரவிளை, கோவளம், கருங்கல், குலசேகரம், மார்த்தாண்டம், அருமனை, திருவட்டார், மேல்புறம், காஞ்சாம்புறம், கொல்லங்கோடு, கண்ணநாகம், திங்கள்சந்தை, மணவாளக்குறிச்சி, குளச்சல் உள்பட மொத்தம் 30 இடங்களில் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top