நாகர்கோவிலில் கல்லூரி முதல்வருக்கு கொரோனா பாதிப்பு

நாகர்கோவிலில் கல்லூரி முதல்வருக்கு கொரோனா பாதிப்பு

in News / Local

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

குமரி மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதார துறை ஊழியர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் காய்ச்சல் பாதிப்பு உள்ளோரை கண்டறிந்து அவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து கொரோனா தொற்று இருக்கிறதா? என்பதையும் சோதனை செய்து வருகிறார்கள்.

இதில் நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் முதல்வருக்கு கடந்த 2 நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டின் அருகில் வசிப்போருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேலும் அவர் பணிபுரிந்த கல்லூரி ஊழியர்கள் 50 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் இன்று மாலை தெரிய வரும்.

இதற்கிடையே கல்லூரி மாணவர் ஒருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பது தெரியவந்துள்ளது.

கல்லூரி முதல்வருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து அக்கல்லூரியில் சுகாதார ஊழியர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தற்போது ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 10-க்கும் மேற்பட்டோரும், தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் 5 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிலர் சிகிச்சையில் உள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top