குமரியில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா

குமரியில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா

in News / Local

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 10 ஆக இருந்தது. ஆனால் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 30-ஐ தாண்டி உள்ளது. இதனால் மக்கள் சற்று அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக நாகர்கோவில் மாநகராட்சியில் 15 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதே போல அகஸ்தீஸ்வரம்- 5, குருந்தன்கோடு- 1, மேல்புறம்-1, ராஜாக்கமங்கலம்- 1, திருவட்டார்- 2, தோவாளை- 9, தக்கலை -4 மற்றும் நெல்லையில் இருந்து வந்த ஒருவர் என மொத்தம் 39 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top