நாகர்கோவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து அந்த அலுவலகத்தில் மாநகராட்சி சுகாதார அலுவலர் பகவதி பெருமாள் தலைமையில் ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது. அந்த அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது மேலும் பணிபுரிந்த சக ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட மூன்று பேரையும் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
0 Comments